கூத்தாநல்லூர், கொரடாச்சேரியில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு

கூத்தாநல்லூர், கொரடாச்சேரியில் மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் அணிவகுப்பு நடந்தது.

Update: 2018-03-17 22:30 GMT
கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலத்தினை திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பின்னர் மத்திய பாதுகாப்பு படையின் துணை போலீஸ் சூப்பிரண்டு இளம்பரிதி தலைமையில், இன்ஸ்பெக்டர் சுபாஷ் முன்னிலையில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இதேபோல் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் நடைபெற்ற ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பின்னர் கூத்தாநல்லூரிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

மேலும் செய்திகள்