விழுப்புரத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

விழுப்புரத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற 2 மகள்களும் காயம் அடைந்தனர்.

Update: 2018-03-17 22:00 GMT
விழுப்புரம்,-

விழுப்புரம் காகுப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் கார்த்திகேயன் (வயது 41), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கலைவாணி (34). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. சிவப்பிரியா (16), சிவனேஸ்வரி (12) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் குடிப் பழக்கம் உடையவரான கார்த்திகேயன் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தனது மனைவி கலைவாணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்தார்.

மேலும் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், உருட்டுக்கட்டையால் கலைவாணியை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற மகள்கள் சிவப்பிரியா, சிவனேஸ்வரி ஆகியோரையும் தாக்கினார்.

இதில் 3 பேரும் காயமடைந்தனர். உடனே அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்