கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் கொள்ளை கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் உருவம் சிக்கியது
அழகியமண்டபத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையனின் உருவத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தக்கலை,
அழகியமண்டபத்தில் சி.எஸ்.ஐ. ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் தினமும் பிரார்த்தனை நடைபெறும். பகல் முழுவதும் ஆலயம் திறந்து இருக்கும். தினமும் காலை 8 மணிக்கு ஊழியர் ஒருவர் ஆலயத்தை திறந்து சுத்தம் செய்து காவல் இருப்பது வழக்கம்.
அதன்படி, சம்பவத்தன்று ஊழியர் ஆலயத்தை திறந்து சுத்தம் செய்த பின்பு சிறிது நேரம் ஆலயத்தில் அமர்ந்திருந்தார். பின்பு மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றார்.
பின்னர், அவர் திரும்ப வந்த போது, ஆலயத்தில் இருந்த உண்டியலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். ஆலய நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும், அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது, ஆலயத்தில் ஒரு மர்ம நபர் புகுந்து உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்து உண்டியலை தூக்கிச் சென்ற மர்மநபரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.