மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-16 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முகமதுமீரா, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் துரைபாஸ்கர், கே.கஜேந்திரன், பாலாஜி, அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயபால், விஜயன், திருநாவுக்கரசு, குணசேகரன் , துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

சிலைகள் சேதம்

அப்போது அவர்கள் பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அடிபணிந்து நிறைவேற்றிய தற்போதைய பட்ஜெட்டை கண்டித்தும், ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் அரசு நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அரசு வங்கிகளை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதை கைவிட வேண்டும், இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக நடத்த வேண்டும், வருங்கால வைப்புநிதிக்கு கூடுதல் வட்டியை கொடுக்க வாய்ப்பு இருந்தும் மத்திய அரசு அரசு வட்டியை குறைப்பதை கண்டித்தும், மக்களால் போற்றப்படும் மாபெரும் தலைவர்களான லெனின், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் பா.ஜ.க.வினரை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கையில் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்