மாவட்ட நூலகம் முன்பு மாற்றுத்திறனாளி அலுவலர் காத்திருப்பு போராட்டம்
பணியிட மாறுதல் உத்தரவு வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்ட நூலகம் முன்பு மாற்றுத்திறனாளி அலுவலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதுக்கோட்டை,
வடகாடு அருகே உள்ள நெடுவாசல் பகுதியை சேர்ந்தவர் சுடர்வேல். 2 கால்களும் செயல் இழந்துள்ள மாற்றுத்திறனாளியான இவர், ஆவுடையார்கோவில் கிளை நூலகத்தில் 3-ம் நிலை நூலகராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சுடர்வேல் நேற்று பணியிட மாறுதல் உத்தரவு வழங்கக்கோரி புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட நூலக அதிகாரி அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து சுடர்வேல் கூறுகையில், நான் ஆலங்குடி கிளை நூலகத்தில் காலியாக உள்ள அரசு நிதி 3-ம் நிலை அலுவலர் பணியிடத்திற்கு மாறுதல் கேட்டு, புதுக்கோட்டை மாவட்ட நூலக அதிகாரியிடம் விண்ணப்பித்து இருந்தேன்.
ஆனால் மாவட்ட நூலக அதிகாரி எனக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதைத் தொடர்ந்து நான் சென்னையில் உள்ள நூலகத்துறை இயக்குனரிடம் பணியிட மாறுதல் கேட்டு நேரில் விண்ணப்பித்தேன். இதைத் தொடர்ந்து நூலகத்துறை இயக்குனர் எனக்கு ஆலங்குடி கிளை நூலகத்திற்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்க கூறினார்.
ஆனால் இதுநாள் வரையிலும் மாவட்ட நூலக அதிகாரி எனக்கு பணியிட மாறுதல் உத்தரவை வழங்க மறுத்து வருகிறார். எனவே பணியிட மாறுதல் உத்தரவு வழங்கும் வரை நான் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன், என்றார்.