பெண்ணிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்த சாமியார் உள்பட 4 பேர் கைது
திருச்சி அருகே பெண்ணிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்த சாமியார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி வாசன்நகரை சேர்ந்தவர் திவ்யராஜன். இவருடைய மகள் நித்யா(வயது 47). இவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது 2 மகள்கள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நித்யா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 5-ந் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
திருச்சி சோமரசம்பேட்டை கோனார்சத்திரத்தை சேர்ந்த தமிழ்மதி என்கிற முத்துகிருஷ்ணன் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ரெட்டைவாய்க்கால் வாசன்நகரை சேர்ந்த வைஷ்னுதேவன் என்கிற ரிஷியோகி எனக்கு அறிமுகமானார். இவர் சிவன்ராஜயோகம் என்ற பெயரில் ஆன்மிக அமைப்பை நடத்தி அங்கு சாமியாராக இருந்து வருகிறார். அந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் தமிழ்மதி இருந்து வருகிறார். இவர்களிடம் எனது குடும்ப கஷ்டங்களை பற்றி கூறினேன். அப்போது எனது பிரச்சினைகள் தீர வேண்டுமானால் ஹரித்துவாரில் நடைபெறும் யாகத்தில் பங்குகொள்ள வேண்டும் என்றும், அதற்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் செலவாகும் என்றும் வைஷ்னு தேவன் கூறினார்.
நானும் எனது தந்தை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையில் இருந்து ரூ.6 லட்சத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதில் அவர் ரூ.3 லட்சத்தை யாக பணிகளுக்காக ஹரித்துவாருக்கு அனுப்புவதாகவும், மீதமுள்ள ரூ.3 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்வதாகவும் கூறினார். அதன்மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்றும் கூறினார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகு எனது தந்தையின் சொத்துகளை ஒவ்வொன்றாக விற்று, அந்த பணத்தை முதலீட்டில் போட்டால் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்அளிக்கும் என்றும், இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தை கூறினார்கள்.
இதனை நம்பி கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளில் எனது தந்தையின் சொத்துக்களை விற்று பணத்தை கொடுத்தேன். அதனை சாமியார் வைஷ்னுதேவன் தனது சகாக்களான பொன்மலை ஆயில்மில்ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்ராவ், வாசன்நகரை சேர்ந்த குமரன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் மூலம் பெற்று, தனது கைக்கு கிடைக்குமாறு செய்து கொண்டார். மேலும், தேவைப்பட்டால் ஒப்பந்தம் எழுதி கொடுப்பதாகவும் என்னிடம் கூறினார்.
நான் எனது சொத்துகள் முழுவதையும் விற்று, சுமார் ரூ.47½ லட்சம் வரை அவர்களிடம் கொடுத்துவிட்டேன். பின்னர் அதற்கான ஒப்பந்தம் எழுதி கேட்டபோது, வைஷ்னுதேவன் என்னை மிரட்டுவது போல் பேசினார். ஆகவே இவர்கள் அனைவரும் கூட்டுச்சதி செய்து, என்னிடம் ஆசைவார்த்தை கூறி, எனது சொத்துக்களை ஏமாற்றி அபகரித்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நித்யாவிடம் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சாமியார் வைஷ்னுதேவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சாமியார் வைஷ்னுதேவன் மற்றும் தமிழ்மதி, ஜெகதீஷ்ராவ், குமரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான ராஜபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.