குடிநீர் குழாய் உடனடியாக சீரமைப்பு
தேவிபட்டினம் அருகே காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு குழாய் பழுதடைந்ததால் 6 ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தினந்தந்தி நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து உடனடியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலைத்தொட்டிக்கு வரும் காவிரி குடிநீர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேவிபட்டினத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேவிபட்டினத்தில் இருந்து கழனிகுடி, பாண்டமங்கலம், நாரணமங்கலம், மாதவனூர், பெருவயல் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்தநிலையில் தேவிபட்டினத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் வழியில் அடிக்கடி குழாய்கள் உடைந்து தண்ணீர் அனைத்தும் வீணாக வெளியேறியது. கடந்த வாரம் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் அனைத்தும் வெளியேறி ஊருணி போல் தேங்கி நின்றது.
குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில் காவிரி குடிநீர் வீணாவதை தடுக்க அந்த பகுதி பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களின் அலட்சியத்தால் கழனிகுடி உள்பட மேற்சொன்ன ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து இந்த செய்தி தினத்தந்தியில் படத்துடன் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து குடிநீர் வாரிய பணியாளர்கள் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ஜாகீர் உசேன் கூறியதாவது:- ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டினத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு வரப்பட்டு, கழனிகுடி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய்கள் தரமற்றதால், அவ்வப்போது உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானதும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். பொதுமக்களின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இந்த பகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.