சென்டிரல் ரெயில்நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மேலும் 5 பேட்டரி கார்கள்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மேலும் 5 பேட்டரி கார்கள் பயணிகள் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகின்றன.
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை தெற்கு ரெயில்வே செய்துள்ளது. பயணிகள் எளிதில் ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயிலில் ஏறும் வகையில் பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மேலும் 5 பேட்டரி கார்கள் நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகின்றன.