கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு மின்சார வாரிய வேலூர் மண்டல அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு, ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பொன்முத்து, பிரபுதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதில் 75-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினார்கள்.
குறைந்தபட்ச ஊதியம்
அப்போது, ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசு பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியமான 380 ரூபாயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கியதாகவும், இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மின்வாரிய அலுவலகம் முன்பும் தொடர்ந்து பணிகளை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.