பெண்களை ஆபாசபடம் எடுத்து சமூக வலை தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் எச்சரிக்கை

பெண்களை ஆபாசபடம் எடுத்து சமூக வலை தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Update: 2018-03-15 20:45 GMT
நெல்லை,

பெண்களை ஆபாசபடம் எடுத்து சமூக வலை தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஆபாச படங்கள்


சமீபகாலமாக முன்விரோதம் காரணமாகவோ அல்லது சில காரணங்களுக்காக பெண்களை பாலியல் தொந்தரவு கொடுக்கும் நோக்கத்தோடு புகைப்படங்கள் மற்றும் ஆபாசபடங்களை எடுத்து வலை தளங்களிலும், ஊடங்களிலும் பரப்புகிறார். பெண்ணை தனிப்பட்ட முறையில் படம் எடுத்து அவற்றில் பரப்பினால் இந்திய தண்டனை சட்டப்படி 3 ஆண்டுகளும், தகவல் தொழில் நுட்ப சட்டப்படி 5 ஆண்டுகளும் சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஒரு பெண்ணின் அல்லது குழந்தையின் படங்களை சமூக வலை தளங்களிலோ வேறு எந்த வகையிலாவது தகவல் பதிவிடுவோர் மற்றும் பரப்புபவர்கள் மீது இந்திய சட்டத்தின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இளஞ்சிறார்கள் குறித்து பெயர் மற்றும் இதர விவரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

கடும் நடவடிக்கை

எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்துக்கு களங்கம் உண்டாக்க கூடிய வகையில் வெளியிடுதல், பரப்புவதை தவிர்ப்பது அனைவரின் கடமையாகும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்