நோயாளிகளை நாற்காலியில் தூக்கி செல்லும் அவலம்
பழுதடைந்த சாலையை சீரமைக்காததால் நோயாளிகளை நாற்காலியில் தூக்கி செல்லும் அவல நிலை அரங்கேறி உள்ளது. இதனால் பொதுமக்களே சீரமைப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி- குன்னூர் சாலையில் அமைந்து உள்ளது எல்லநள்ளி. எல்லநள்ளி அருகே உள்ள அட்டுக்கொல்லை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து குன்னூர் சாலையில் உள்ள பிக்கட்டி சந்திப்பு பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. அட்டுக்கொல்லை கிராம மக்கள் ஊட்டி, குன்னூர் மற்றும் வெளியிடங்களுக்கு செல்ல பஸ் ஏற அந்த சாலையை தான் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த சிமெண்ட் சாலை கடந்த பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் அந்த வழியாக செல்ல முடியவில்லை. அந்த பாதை ஏற்ற, இறக்கமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் கேத்தி பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது முதியவர்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டாலோ அவர்களை நாற்காலி மற்றும் ஸ்டெட்ச்சரில் தூக்கிக்கொண்டு செல்லும் அவல நிலை காணப்படுகிறது. அதன் காரணமாக மனமுடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, தங்களது சொந்த செலவில் சிமெண்ட் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கூலி தொழிலாளி பரத் (வயது 40) என்பவர் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் ஒரு நாற்காலியில் அமர வைத்து குன்னூர் சாலைக்கு தூக்கி வந்தனர். பின்னர் பரத் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதே நிலை பல ஆண்டுகளாக நீடிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து அட்டுக்கொல்லை கிராம தலைவர் பூட்டன் கூறியதாவது.
அட்டுக்கொல்லை கிராமத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். குன்னூர் சாலையில் இருந்து கிராமத்துக்கு வரும் சாலை பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் கேத்தி பேரூராட்சி நிர்வாகத்துக்கு மனுக்கள் கொடுத்தும், இதுவரை சீரமைப்பு பணிகளை தொடங்க வில்லை. அதன் காரணமாக கிராம மக்கள் ஒன்றிணைந்து ரூ.1½ லட்சம் செலவில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.