அரசு பஸ் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு 28 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பஸ்சில் இருந்த 28 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி,
சென்னையில் இருந்து பயணிகளுடன் திருச்சிக்கு நேற்று பகல் அரசு பஸ் ஒன்று வந்தது. டிரைவர் பாண்டியன் (வயது 41) பஸ்சை ஓட்டி வந்தார். திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு, பின்னர் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு மணப்பாறைக்கு அந்த பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர்.திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. சாலையில் இருந்து மிளகுபாறை நோக்கி செல்லும் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த இரும்பினாலான மின்கம்பம் ஒன்று திடீரென வளைந்து பஸ் மீது சாய்ந்து விழுந்தது. இதனால் டிரைவர் பாண்டியன் அதிர்ச்சி அடைந்து பஸ்சை அதே இடத்தில் நிறுத்தினார். மின்கம்பம் விழுந்ததை அறிந்து பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறினார்கள். உடனடியாக அவர்கள் பஸ்சின் கதவை திறந்து வெளியே வர முயன்றனர்.
அந்த பஸ்சில் பயணிகள் இறங்கி, ஏறுவதற்கு ஒரு கதவு மட்டுமே இருந்தது. ஆனால் அந்த கதவையும் திறக்க முடியாதபடி சரிந்து விழுந்த மின்கம்பம் கதவை அடைத்துக் கொண்டு இருந்தது. இதனால் பயணிகள் கதவை திறக்க முடியாமலும், வெளியே வர முடியாமலும் பஸ்சுக்குள் தவித்தனர். இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியினர், ஓடிச்சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சிலர் மின்வாரிய அலுவலகத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் பயணிகள் ஒவ்வொருவராக டிரைவர் சீட்டின் கதவு வழியாக கீழே இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்து, வேறு வழியாக வாகனங்களை திருப்பி விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. மின்கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் பயணிகள் 28 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.