கும்பகோணத்தில் அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த 27 பேர் மீது வழக்குப்பதிவு

கும்பகோணத்தில் அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-03-15 22:45 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையிலும் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கும்பகோணம் மற்றும் சுவாமிமலை பகுதியில் 27 இடங்களில் விளம்பர பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து, விளம்பர பேனர்களை அகற்றும்படி அறிவுறுத்தினர். ஆனால் பேனர்கள் அகற்றப்படவில்லை.


இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுதொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்