கோவில்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
கோவில்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் விஜயன் மகன் விஷ்ணு (வயது 25). இவர் பாலக்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்த நிறுவனத்தின் புதிய கிளை, ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 12-ந் தேதி பாலக்காட்டில் இருந்து விஷ்ணு மற்றும் சக ஊழியர்களான அமல் ஜோஸ், சிந்து ஆகிய 3 பேரும் ஒரு காரில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புறப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் அமல் ஜோஸ் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விஷ்ணு, சிந்து ஆகிய 2 பேருக்கும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் கவிழ்ந்து...
பின்னர் நேற்று மதியம் விஷ்ணுவை கொல்லத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக, அவருடைய தந்தை விஜயன் ஆம்புலன்சில் அழைத்து சென்றார். அந்த ஆம்புலன்சை மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து (26) ஓட்டி சென்றார். ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக நித்யா (22) இருந்தார். மேலும் விஜயனின் உறவினரான சந்திரசேகர், நண்பரான சுலைமான் ஆகியோரும் அந்த ஆம்புலன்சில் சென்றனர்.
கோவில்பட்டி அருகே நல்லி என்.சுப்பையாபுரம் தனியார் மில் அருகில் சென்றபோது ஆம்புலன்சின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது.
6 பேர் படுகாயம்
இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த விஷ்ணு, விஜயன், சந்திரசேகர், சுலைமான், மாரிமுத்து, நித்யா ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த விஷ்ணு, விஜயன் ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.