அதிகளவில் பண பரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டு: கோவை நகை வியாபாரி வீடு-அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
அதிகளவில் பண பரிவர்த்தனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கோவை நகை வியாபாரி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அத்துடன் தனியார் நிதிநிறுவன கிளைகளிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
கோவை,
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் விமல் (வயது 47). இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். அதுபோன்று கோவை பெரியக்கடை வீதியில் ஸ்ரீநிதி கோல்டு என்ற பெயரில் அலுவலகமும் நடத்தி வருகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது, விமல் தனது வங்கி கணக்கு மூலம் அதிகளவில் பணம் பரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து விமலின் வீடு மற்றும் அலுவலகத்தில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த சில முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று விமல் வீடு மற்றும் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வீடு மற்றும் அலுவலகத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதுபோன்று உள்ளே இருந்து யாரையும் வெளியே செல்லவிடவில்லை. அதுபோன்று யாரையும் செல்போன் மூலம் பேச அனுமதிக்கவில்லை
மதியம் ஒரு மணி வரை நடந்த சோதனையில், அலுவலகத்தில் இருந்த விமலிடம் அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர். அதுபோன்று அங்கு இருந்த சில ஆவணங்களை எடுத்து, அது தொடர்பாகவும் கேள்விகளை கேட்டனர். அத்துடன் வியாபாரம் செய்யும் தொகை, அதற்கு வருமானவரி கட்டப்படுகிறதா? என்பது குறித்தும் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவன கிளைகளில் அதிகளவில் பணம் செலுத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் கோவையில் உள்ள காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, கணபதி, ரெயில் நிலையம் அருகே, ஒப்பணக்கார வீதி, கணபதி உள்பட 7 இடங்களில் உள்ள அந்த தனியார் நிதிநிறுவன கிளைகளில் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
விமல் அந்த கிளைகளில் செலுத்திய தொகை எவ்வளவு? யார் பெயரில் செலுத்தி உள்ளார்? அதற்கான ஆவணங்கள் எங்கே இருக்கிறது? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு, அந்த ஆவணங்களையும் வாங்கி சோதனை செய்தனர். இந்த சோதனை நேற்று மாலை வரை நீடித்தது.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நகை வியாபாரியான விமல், அதிகளவில் பணம் பரிவர்த்தனை செய்து உள்ளார். ஆனால் அந்த பணம் எப்படி வந்தது? என்பது குறித்து கேட்டதற்கு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இதையடுத்து சோதனை நடத்தி உள்ளோம். அதில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அந்த ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.
விமல் கூறியது தொடர்பாகவும், வருமானவரி கட்டாமல் மோசடி செய்தது குறித்த புகார் தொடர்பாகவும் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கோவையில் உள்ள தனியார் நிதிநிறுவன கிளைகளில் விசாரணை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.