வளர்ச்சி திட்டங்களுக்கான பணி ஆணையை வழங்க வேண்டும்
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு வளர்ச்சி திட்டங்களுக்கான பணி ஆணையை வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் கடந்த மாதம்(பிப்ரவரி) 28-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. மேயர் சம்பத்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர் உள்பட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் ஆளும் காங்கிரஸ் குழு தலைவர் சிவராஜ் எழுந்து பேசுகையில், “கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம். அந்த தேதி அறிவிப்புக்கு முன்பு ஒதுக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு உடனடியாக அதிகாரிகள் பணி ஆணையை வழங்க வேண்டும். அப்போது தான் பணிகளை தொடங்க முடியும். இதில் தாமதம் ஏற்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு தேர்தல் முடியும் வரை எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாது“ என்றார்.
இதற்கு பா.ஜனதா கவுன்சிலர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்தனர். இந்த விஷயத்தில் அதிகாரிகளுக்கு மேயர் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அப்போது காங்கிரசை சேர்ந்த முன்னாள் மேயர் மஞ்சுநாத்ரெட்டி,“அதிகாரிகள் எந்த பணியும் செய்யவில்லை. அனைத்து இணை கமிஷனர்களும் ஒரே நாளில் பணி ஆணையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
அப்போது மீண்டும் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் சிவராஜ், “நாளையே(அதாவது இன்று) இணை கமிஷனர்கள் கூட்டத்தை கூட்டி இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். 2 நாட்களில் ஒற்றைசாளர முறையில் பணி ஆணைகளை வழங்க வேண்டும். ஒருவேளை இந்த பணியில் அலட்சியம் காட்டினால் அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் நேத்ரா நாராயணா பேசுகையில், “அதிகாரிகள் அலுவலகங்களில் இருப்பதே இல்லை. கேட்டால், தேர்தல் பணிக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். ஏதாவது தகவல் வேண்டுமென்றாலும் கிடைப்பது இல்லை“ என்றார். சட்டசபை தேர்தல் தேதி அறிவுப்புக்கு முன்பு வளர்ச்சி திட்டங்களுக்கான பணி ஆணையை வழங்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளின் கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.