லாட்டரி சீட்டுகள் விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கச்சேரி ரோட்டு தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 45). இவர் தொடர்ந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஜெயங்கொண்டம் பகுதிகளில் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி (மாதம்) 20-ந்தேதி லாட்டரி சீட்டுகளை அப்பகுதியில் விற்று கொண்டிருந்தார். இதைபார்த்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் தினேஷ், அவரை பிடிக்க முயன்றார். அப்போது சம்பத், சப்-இன்ஸ்பெக்டர் தினேசை கத்தியால் குத்த முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத் தனர். இந்த நிலையில், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சம்பத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் பரிந்துரை செய்தார். அதன் பேரில் சம்பத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள சம்பத்திடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.