நிலத்தடி நீரை எடுப்பதால் கடல் தண்ணீர் உட்புகுவதாக குற்றச்சாட்டு
சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதால் கடல் தண்ணீர் நிலப்பகுதியில் உட்புகுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்குன்றம்,
சென்னை மாதவரம், மஞ்சம்பாக்கம், மாதவரம் பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் 500 அடிக்கு கீழ் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு நிலத்தடி நீரை தினந்தோறும் ஏராளமான டேங்கர் லாரிகளில் எடுத்துச்சென்று சென்னையில் உள்ள ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன் நிறுவனங்கள் அனுமதி இன்றி இயங்குவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இங்கிருந்து தினமும் பல லட்சம் தண்ணீர் கேன்கள் மூலம் மினி லாரிகளில் சென்னையில் உள்ள அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த பகுதிகளில் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதை தடுக்க வேண்டும் என பொது நல சங்கங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீர் எடுக்க பயன்படுத்தப்படும் ராட்சத மோட்டார்களையும், நிலத்தடி நீர் எடுத்துச்செல்லும் டேங்கர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
அதன் பிறகும் இப்பகுதியில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பது தற்போது நடைபெற்று வருகிறது. 500 அடிக்கு கீழே ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் எடுப்பதால் மாதவரம் பகுதியில் கடல் தண்ணீர் நிலத்தடியில் புகுந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாதவரம் மாரியம்மன் கோவில், பாரதியார் தெரு, அருள்நகர், மூலச்சத்திரம் ஆகிய பகுதிகளில் தற்போது வீட்டு உபயோக ஆழ்துளை கிணறுகளில் அதிக அளவில் உப்பு கலந்த குடிநீர் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டும் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுக்க தடை உத்தரவு பிறப்பித்தது.
இது குறித்து பொதுநல சங்க நிர்வாகி மா.போ.பழனி கூறுகையில், மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலைமை உள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளால் இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.
மாதவரம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட தட்சணாமூர்த்தி கூறும் போது, சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க முதல்- அமைச்சர், அமைச்சர்களிடம் முறையிட போவதாக தெரிவித்தார்.