சென்னை புறநகர் ரெயில் நிலைய பகுதியில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனை
சென்னை புறநகர் ரெயில் நிலைய பகுதிகளில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம்,
சென்னையில் போதைப்பொருட்கள் விற்பனைசெய்யும் கும்பலின் முக்கிய வியாபார தளங்களாக சென்னை புறநகர் பகுதி ரெயில் நிலையங்கள் மாறி வருகின்றன.
சென்னையில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் பகுதியில் ரெயில்வே போலீஸ் நிலையங்கள் உள்ளன. புறநகர் பகுதியில் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சிங்கபெருமாள்கோவில் வரை தாம்பரம் ரெயில்வே போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த போலீஸ் நிலையத்தில் போதுமான போலீசார் இருந்தும், வேறு பணிகளுக்கு செல்வதால் ரெயில் நிலைய பகுதிகளில் கஞ்சா விற்பனை கும்பல் எந்தவித தடையும் இன்றி தங்களது கஞ்சா விற்பனையை செய்து வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, சென்னை சவுகார்பேட்டை, வடசென்னை பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் ரெயில் நிலையங்கள் பகுதியில் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தாம்பரம்-எழும்பூர் மார்க்கம், பறக்கும் ரெயில் மார்க்கம் பகுதியில் உள்ள ரெயில் நிலையங்கள் கஞ்சா கும்பலுக்கு முக்கிய வியாபார தளங்களாக உள்ளன.
சென்னை புறநகர் பகுதியில் மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், தாம்பரம் சானடோரியம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி ரெயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளிலும், தண்டவாளம் ஓரங்களிலும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது.
கஞ்சா விற்பனை கும்பலின் முக்கிய வாடிக்கையாளர்களாக இந்த தண்டவாளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும், ஐ.டி. நிறுவனங்களைச்சேர்ந்த ஊழியர்களும் உள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.
கடந்த 1 வருடமாக இந்த பகுதியில் அதிகளவில் போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரிகள், டிப்-டாப்பாக உடை அணிந்து, குறிப்பிட்ட நேரத்தில் ரெயில்களில் வந்து, ரெயில் நிலைய பகுதியில் தினமும் ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர்.
மதுபானம் விலை ஏறிய பிறகு கூலித்தொழிலாளர்கள் பலரும் கஞ்சாவுக்கு அடிமையாகிவிட்டதால், கஞ்சா விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது. 100 ரூபாய் கொடுத்தால் 5 பேர் பயன்படுத்தும் அளவுக்கு கஞ்சா பொட்டலங்கள் கிடைக்கிறது. குறைந்த விலையில் அதிக போதை என்பதால் இதன் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் மாணவிகளுக்கும் கஞ்சா போதை பழக்கம் பரவி, தற்போது மாணவிகளும் இதற்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. பெரும்பாலும் ரெயில்வே தண்டவாளம் பகுதிகளை ஒட்டியே இந்த கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
கஞ்சா உட்கொள்ளும் மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தாலும், அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது யார்? என்ற தகவலை பிடிபடுபவர்கள் யாரும் போலீசாரிடம் தெரிவிப்பதில்லை.
கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கி விட்டதால் சில்லரை வியாபாரிகளும் பெருகி வருகின்றனர். சிறு, சிறு பொட்டலங்களாக விற்பனை செய்பவர்கள் யார்? என்று போலீசார் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பலர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள ரெயில் நிலையங்களில் பல இடங்களில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சுற்றி வருகின்றனர். ரெயில்வே போலீசார், ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் வழக்குகளை மட்டுமே விசாரித்து வருகின்றனர். ஆனால் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள உள்ளூர் போலீசாரும், ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும், ரெயில்வே போலீசாரின் எல்லைக்குள் வரும் பகுதிகளிலும் ரோந்து செல்லாததால் மீனம்பாக்கம், பல்லாவரம், திரிசூலம் ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை எந்த தடையும் இன்றி கொடிகட்டி பறக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம் சானடோரியம் பகுதியில் கஞ்சா போதையில் மாணவர்கள் சிலர், பள்ளி மாணவிக்கும் கஞ்சா கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடைபெற்றதாகவும், குடும்ப மானம் கருதி மாணவியின் பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் கொடுக்காமல் சென்றதாகவும், சானடோரியம் பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல தாம்பரம், பல்லாவரம் பகுதியை சுற்றியுள்ள பல பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கஞ்சா போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். தாம்பரத்தில் பள்ளியில் கஞ்சா போதையில் வந்த மாணவர்களை, பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை செய்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
கூலி தொழிலாளிகள், ரவுடிகள், ஆட்டோ டிரைவர்கள் என இருந்த கஞ்சா போதை வட்டமானது, தற்போது கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் என வளர்ந்துவிட்டது. இது சமூகத்திற்கு பெரும் தீங்கை இழைக்கும் நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
இதை தடுக்க போலீசார் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்காமல் ரெயில் நிலையங்களில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தடுக்க ரெயில்வே போலீசாருடன் உள்ளூர் போலீசாரும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் பெற்றோரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் அதற்குரிய தீர்வை உடனே காணவேண்டும். தங்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையாவதை தடுக்க பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.