மதுராந்தகத்தில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி மதுராந்தகத்தில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-12 22:00 GMT
மதுராந்தகம்,

மதுராந்தகம், சித்தாமூர், அச்சரப்பாக்கம், லத்தூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள இருளர், நரிக்குறவர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்ட தலைவர் பொன்னுசாமி, தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ருக்மாங்கதன் ஆகியோர் தலைமையில் மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் இது தொடர்பாக கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்