தென்காசியில் ரூ.15 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி நீதிபதி தொடங்கி வைத்தார்
தென்காசியில் ரூ.15 கோடியில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணியை, மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.
தென்காசி,
தென்காசியில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என பல்வேறு இடங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி ரூ.15 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு ஆகியன அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தென்காசி பழைய அரசு ஆஸ்பத்திரி இருந்த இடத்தில் இதனை கட்ட முடிவு செய்யப்பட்டு நேற்று காலை அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், மாவட்ட குற்றவியல் நீதிபதி ராஜமாணிக்கம், செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினர்.
விழாவில் பொதுப்பணித்துறை சிறப்பு முதன்மை என்ஜினீயர் ஆசைத்தம்பி, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி ஈஸ்வரன், முதன்மை சார்பு நீதிபதி நாகராஜன், கூடுதல் சார்பு நீதிபதி திருவேங்கட சீனிவாசன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மருது பாண்டி, கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாதன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு திரிவேணி, செங்கோட்டை மாஜிஸ்திரேட்டு சதீஸ் குமார், தென்காசி வக்கீல் சங்க தலைவர் செல்லத்துரை பாண்டியன், செயலாளர் மாரியப்பன், அட்வகேட் அசோசியேசன் தலைவர் பாண்டியராஜ், செயலாளர் புகழேந்தி மற்றும் வக்கீல்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.