குன்னூரில் போதுமான அளவு குடிநீர் வழங்க கோரி தர்ணா போராட்டம்
குன்னூரில் போதுமான அளவு குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குன்னூர்,
குன்னூர் நகராட்சி 9- வது வார்டில் மேல்கடை வீதியும், 17- வது வார்டில் கிராஸ் பஜார் குடியிருப்பு பகுதியும் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 3,500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து 15-ல் இருந்து 20 நாட்கள் ஆகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மேல் கடை வீதி, கிராஸ்பஜார் குடியிருப்பு பகுதிகளுக்கு ½ மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதுவும் குறைந்த அழுத்தத்தில் வந்ததால் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் ஏறவில்லை. மற்ற பகுதிகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மேல்கடை வீதி, கிராஸ்பஜார் பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென்று மாரியம்மன் கோவில் செல்லும் நடைபாதை படிக்கட்டில் அமர்ந்து போதுமான அளவு குடிநீர் வழங்கவேண்டி திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் தண்ணீர் வீணாகி வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுவதாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.
அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த பகுதி குடிநீர் பணியாளரை அழைத்து குடிநீர் மெயின் குழாயில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சீர் செய்ய உத்தரவிட்டனர். மேலும் குழாயை சீரமைத்த பிறகு 2 நாட்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.