வங்கிகளை விற்க வழிவகுக்கும் மசோதாவை வாபஸ்பெற வேண்டும்: மத்திய அரசுக்கு, ஊழியர் சங்கம் கோரிக்கை
வங்கிகளை விற்க வழிவகுக்கும் மசோதாவை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும் என்று யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி,
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் ஊழியர் சங்க 18-வது மாநாடு புதுவை ஓட்டல் சூர்யா இன்டர்நேசனலில் நடந்தது. மாநாட்டிற்கு சங்க செயல் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் முருகன் வரவேற்று பேசினார்.
மாநாட்டை சங்க பொதுச்செயலாளர் ஜகந்நாத் சக்ரவர்த்தி தொடங்கிவைத்தார். சங்க ஆலோசகர் ராஜகோபாலன் நாயர் கொடியேற்றி வைத்தார். தமிழக பொதுச்செயலாளர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் நிதி தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு மசோதாவிற்கு ஒப்புதலை வழங்கியது. இந்த சட்டம் பலத்த எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு தீர்வு ஆணையத்தை அமைக்க வழிவகை செய்கிறது. இந்த தீர்வு ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் வங்கிகளின் வரவு செலவு கணக்குகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யும் என்றும், எந்த வங்கியின் நிதிநிலைமை மோசமானது என்று கருதினாலோ அல்லது நஷ்டம் ஏற்படுவதற்கான காரணங்கள் தென்பட்டாலோ அந்த வங்கியை வேறு வங்கிகளோடு இணைக்க ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏற்பாடு பொதுத்துறை வங்கிகளை மூடுவது அல்லது ஒன்றிணைப்பது மூலம் தனியார் மயமாக்குவதற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுக்கும். பெரும் முதலாளிகள் வங்கிகளில் கடன்பெற்று திருப்பி கட்டாததன் மூலம் திவால் நிலையை நோக்கி செல்லும் வங்கிகளை தாங்கிபிடித்து நிறுத்திட டெபாசிட்டாளர்களின் பணத்தை ஒதுக்கீடு செய்யவும் இந்த மசோதா வழிவகுக்கும். எனவே வாராக்கடனை வசூல் செய்ய கடுமையான சட்டத்தை நிறைவேற்ற இயலாத மத்திய அரசு சாதாரண மக்களின் சேமிப்பில் கைவைத்தும், வங்கிகளை விற்கவும், இணைக்கவும் வழிவகுக்கும் மக்கள் விரோத ஊழியர் விரோத மசோதாவை மைய அரசு வாபஸ் வாங்கவேண்டும்.
*தற்காலிக பணியாளர்கள் மற்றும் வங்கி நிர்வாகிகளின் வாகன ஓட்டுனர்களை நிரந்தரமாக்க வேண்டும்.
*மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது இரவு பகல் பாராமல் வாடிக்கையாளர் சேவை புரிந்த ஊழியர்களுக்கு கூடுதல் பணிக்கு மிகை ஊதியம் தாமதமில்லாமல் வழங்கவேண்டும்.
*ஏற்கனவே உறுதி அளித்தபடி சம்மேளனத்துடன் 6 மாதத்துக்கு ஒருமறை கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
யூனியன் வங்கி கிளைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை விகிதம் கூடுதலாக இருக்கிறது. புதிய நியமனங்கள் என்பது பெயரளவிற்கே இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு 5,493 ஆக இருந்த துணைநிலை ஊழியர் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு 4,990 ஆக குறைந்துள்ளது. இதன் விளைவாக துணைநிலை ஊழியர்கள் அவசர தேவைகளுக்காகக்கூட விடுப்பு எடுப்பதில் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் எழுத்தர்கள் மற்றும் துணைநிலை ஊழியர்களை நியமனம் செய்திட வேண்டும்.
*ஆண்டுதோறும் பதவி உயர்வு தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.