மாவட்டத்தில் 7 மையங்களில் போலீஸ் பணிக்கான பொது எழுத்துத்தேர்வு 14,961 பேர் எழுதினார்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற போலீஸ் பணிக்கான பொது எழுத்துத்தேர்வை 14,961 பேர் எழுதினார்கள்.
தர்மபுரி,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் 2–ம் நிலை போலீஸ் மற்றும் சிறை போலீஸ், தீயணைப்பு படை வீரர் பணிகளுக்கான பொது எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் 7 மையங்களில் இந்த எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மொத்தம் 16,646 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்வையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த அனைவரும் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்தவர்கள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் 7 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 14,961 பேர் ஆர்வத்துடன் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 1,685 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு மையங்களை கண்காணிக்க துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு நடைபெற்ற மையங்களை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு முடிந்த பின்னர் அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.