ராமேசுவரம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஒரேநாளில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ராமேசுவரம் பகுதியில் நாளுக்கு நாள் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நேற்று வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமதீர்த்தம் வடக்கு, தெற்கு, மேட்டுத்தெரு, எம்.கே.நகர், முருங்கைவாடி, வேர்க்கோடு, கடற்கரை, தம்பியான்கொல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதில் பெரும்பாலும் வெறிநாய்களாக இருப்பதால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ராமேசுவரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் கடித்துள்ளன.
இதில் ராமேசுவரம் மேட்டுத்தெருவை சேர்ந்த நம்புத்தாய்(வயது55), எம்.கே.நகரை சேர்ந்த மாரியம்மாள்(60), தம்பியான்கொல்லை பகுதியை சேர்ந்த காளசுவரி (35), பாலமுருகன்(12), முருங்கைவாடி பகுதியை சேர்ந்த ரெங்கசாமி(65), காட்டுப்பிள்ளையார்கோவில் ராஜலட்சுமி(35), ராமதீர்ததம் தெற்கு ஜாபர் (39) உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நேற்று ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் நாய்க்கடிக்கு முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
இவர்களுக்கு நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்டதுடன் வெறிநாய்க்கடிக்கான ஊசியை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் ராமேசுவரத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களையும் நாய்கள் கடித்துள்ளன. ராமேசுவரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய், வெறிநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இவற்றை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.