பள்ளிக்கு செல்லாததை பாட்டி கண்டித்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை
மயிலத்தில் பள்ளிக்கு செல்லாததை பாட்டி கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மயிலம்,
மயிலம் சன்னதி வீதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகள் லோகேஸ்வரி (வயது 13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந் தாள். இவள் சரியான முறையில் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளாள். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த லோகேஸ்வரியை அவரது பாட்டி ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என கூறி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவள் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டாள். இதில் மயங்கி விழுந்த அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் லோகேஸ்வரி பரிதாபமாக இறந்தாள். இதையறிந்த அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.