கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பது எப்போது?
கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பது எப்போது? என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் பதிலளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 28-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்பாக கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் தேர்தல், அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் 14-வது தேசிய மாநாடு பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவும், கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் பெங்களூருவுக்கு வந்தார். மேலும் சட்டசபை தேர்தல் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் மற்றும் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பது எப்போது என்பது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த தேர்தலை நேர்மையான முறையிலும், நம்பக தகுந்த முறையிலும் நடத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. வாக்காளர் பட்டியலில் தவறு இருந்தால், அதனை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம். அந்த தவறுகளை திருத்தி கொள்ள தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
கர்நாடக சட்டசபைக்கு எந்த தேதியில் தேர்தல் நடத்தப்படும் என்பது தொடர்பாக ஏப்ரல் 15-ந் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அது தவறானதாகும். கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் தேதி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். நான் சொல்லும் கருத்துகளை தவறாக புரிந்து கொண்டு, ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டால், அதற்கு நான் பொறுப்பு அல்ல.
வாக்காளர் அடையாள அட்டையுடன், இதுவரை 32 கோடி பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் 54.5 கோடி வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்க வேண்டி உள்ளது. ஆனால் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு எதிராக கர்நாடகத்தை சேர்ந்த தாமஸ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருவதால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்தவுடன் மீதமுள்ள 54.5 கோடி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படும். ஏற்கனவே 32 கோடி பேரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 3 மாதங்களே தேவைப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு கூறுகின்றனர். அதுபோன்ற, முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. நம்பக தகுந்த குற்றச்சாட்டு கூறினால், அது குறித்து பரிசீலித்து, குற்றச்சாட்டுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஒவ்வொரு பூத்தில் பதிவான வாக்குகளை மட்டுமே ஒரே நேரத்தில் எண்ணும் வசதி உள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோடலைசர்‘ என்ற நவீன கருவியை பயன்படுத்த அனுமதித்தால், ஒரே நேரத்தில் 14 பூத்களில் பதிவான வாக்குகளை எண்ண முடியும். இந்த கருவியை பயன்படுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.”
இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் கூறினார்.