எஸ்.எஸ்.எல்.சி தேர்வையொட்டி அரசு பஸ்களில் மாணவர்களுக்கு இலவச பயணம்
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி வரை நடக்க உள்ளது.
பெங்களூரு,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு தாங்கள் படிக்கும் பள்ளியில் இருந்து வேறு பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் இயக்கப் படும் பஸ்களில் மாணவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து தேர்வு மையம் வரை இலவசமாக பயணம் செய்யலாம். அரசு பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்கள், தங்களின் தேர்வு அறை நுழைவு சீட்டை (ஹால் டிக்கெட்) கண்டக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
இந்த தகவல் கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.