கர்நாடகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்

கர்நாடகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

Update: 2018-03-10 23:23 GMT

பெங்களூரு,

* பெங்களூரு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு கமி‌ஷனராக இருந்த தயானந்தா, கர்நாடக மத்திய மண்டல ஐ.ஜி.யாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* மத்திய மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பு வகித்த அம்ரித் பால், பெங்களூரு நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக செயல்படுவார்.

* பெங்களூருவில் நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக இருந்த உமேஷ் குமார், உள்துறையில் போலீஸ் மற்றும் செயலாளர் பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு இருக்கிறார்.

* பெங்களூருவில் தீயணைப்பு பிரிவில் கூடுதல் இயக்குனராக இருந்த சவ்மீண்டு முகர்ஜி, கர்நாடக தெற்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
*

கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனராக செயல்பட்ட ரவி, பல்லாரி மண்டல ஐ.ஜி.யாக பணி செய்வார்.

* கர்நாடக தெற்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றிய விபுல் குமார், மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் பயிற்சி பள்ளியின் இயக்குனராக செயல்படுவார்.

* பல்லாரி மண்டல ஐ.ஜி.யாக செயல்பட்ட சிவபிரசாத், கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனராக பொறுப்பு ஏற்பார்.

* பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அம்ரித் சிங், மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனராக செயல்பட்ட அனுஜித், பெங்களூரு சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

* மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருநத ரவி டி.சென்னண்ணவர், பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனராக செயல்படுவார்.

* விஜயாப்புரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்த குல்தீப் குமார் ஜெயின், பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் பிரிவின் 9–வது பட்டாலியன் கமாண்டோவாக பொறுப்பேற்பார்.

* பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் பிரிவின் 9–வது பட்டாலியன் கமாண்டோவாக செயல்பட்ட நிக்கம் பிரகாஷ் அம்ரீத், விஜயாப்புரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுவார்.

* தாவணகெரே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செயல்பட்ட பீமாசங்கர், பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ள்ள ராதிகா, பெங்களூரு ஊழல் தடுப்பு படை சூப்பிரண்டாக செயல்படுவார்.

* கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள அனூப் செட்டி, பெங்களூரு உளவுத்துறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

* உப்பள்ளி–தார்வார் நகரின் சட்டம்–ஒழுங்கு துணை போலீஸ் கமி‌ஷனராக உள்ள ரேணுகா சுகுமார், கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செயல்படுவார்.

* பெங்களூரு வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனராக உள்ள கிரீஷ், மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செயல்படுவார்.

* பெங்களூரு ஊழல் தடுப்பு படை சூப்பிரண்டாக செயல்பட்ட கலா கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

மேலும் செய்திகள்