தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கி மோட்டார்சைக்கிள் பறிப்பு போலீஸ் வலைவீச்சு

கல்லாவி அருகே தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கி அவர் வைத்திருந்த மோட்டார்சைக்கிளை 4 பேர் கொண்ட கும்பல் பறித்து சென்றது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-03-10 22:15 GMT
கல்லாவி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சீனிவாசன் (வயது 25). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை வழியாக சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் கல்லாவி அருகே உள்ள நொஞ்சிப்பட்டியைச் சேர்ந்த புருஷோத்தமன் (22), இளவரசன் (22) உள்பட 4 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பீர் பாட்டில் ஒன்றை தூக்கி வீசினார்கள். அந்த பீர் பாட்டில் சீனிவாசன் மீது பட்டு கீழே விழுந்தார்.

4 பேர் மீது வழக்கு

இது குறித்து சீனிவாசன் அவர்களிடம் கேட்ட போது அவரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேரும், கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவர் வைத்திருந்த மோட்டார்சைக்கிளையும் பறித்து சென்றார்கள். இது குறித்து சீனிவாசன் கல்லாவி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரித்து, புருஷோத்தமன், இளவரசன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்