மாநகராட்சி அதிகாரிகளுடன் அ.தி.மு.க. பிரமுகர் வாக்குவாதம்
பெரம்பூர் பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் அ.தி.மு.க. பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூர் ரமணா நகர், ஜவகர் நகர் மற்றும் மேல்பட்டிபொன்னப்ப தெருவில் சாலையை ஆக்கிரமித்து மேற்கூரைகள், கார் நிறுத்துமிடங்கள் அமைத்து இருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முன்வந்தனர்.
ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தனிநபர் ஒருவர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார். மாநகராட்சி அதிகாரிகள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த ஐகோர்ட்டு, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட்டது.
அதன்படி, தண்டையார்பேட்டை 4-வது மண்டல அதிகாரி அனிதா தலைமையில் செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர் மாதவசங்கர், உதவி பொறியாளர் பிரபு மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் சாலையோரம் வீடு, கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வெற்றிவேந்தன், மாநகராட்சி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். செம்பியம் உதவி கமிஷனர் சரவணகுமார் உத்தரவின் பேரில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உடனடியாக வெற்றிவேந்தனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அதன்பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. சுமார் 50 வீடு, கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து அமைத்து இருந்த மேற்கூரைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவை இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.