தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை விரைவில் திறக்க நடவடிக்கை ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

Update: 2018-03-10 23:00 GMT
திருச்சி,

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் 4 மாநில தலைமை செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி தமிழக தலைமை செயலாளர் கலந்து கொண்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாடு அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணல் குவாரிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தால் அது பற்றி உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்