பூவாயிகுளத்தில் ஜல்லிக்கட்டு; 5 பேர் காயம் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்
பூவாயிகுளம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் 5 பேர் காயமடைந்தனர்.
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். ஆனால் போதிய பாதுகாப்பு அம்சம் இல்லை எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி நேற்று பூவாயிகுளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
இதையொட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தின் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஏராளமான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக கோவில் காளையை அவிழ்த்து விட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதில் சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.
இதில் திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், திருமானூர், புள்ளம்பாடி, கீழப்பழூர், மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்னம், தா.பழூர், சுத்தமல்லி, கீழமிக்கேல்பட்டி, செந்துறை இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், உடையார்பாளையம், தத்தனூர், ஜெயங்கொண்டம், மதாபுரம், பிச்சனூர், பிராஞ்சேரி, வெட்டியார்வெட்டு, மனக்கரை, சின்னவளையம், ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான், உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த 400-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் (வயது 31), கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் (32), நாயகனைபிரியாளை சேர்ந்த கார்த்திக் (32), குமிளங்குழியை சேர்ந்த குமார் (39), திருவரம்பூரை சேர்ந்த சாமிதுரை (30) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், வீரர்களிடம் பிடி படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், குத்து விளக்கு, கட்டில், பீரோ, டேபிள், டி.வி.ஸ்டேண்ட், மின்விசிறி, செல்போன், நாற்காலிகள், வேட்டி, துண்டு போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது காளையை அடக்கும் வீரர்களுக்கு ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கப் படும் என்று மேடையில் அறிவித்தார். ஆனால் அந்த காளை யார் கையிலும் பிடி படாததால் காளை உரிமையாளரே ஆட்டுக்குட்டியை எடுத்து சென்றார்.
கீழப்பழூர், திருமானூர், திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், புள்ளம்பாடி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பூவாயிகுளம் கிராமமக்கள் செய்திருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் காளைகளை அவரவர் ஊருக்கு வாகனங்களில் கொண்டு சென்றனர்.