பிரேக் பிடிக்காததால் லாரி சுவரில் மோதியதில் டிரைவர் காயம்

ஊட்டி காந்தல் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது.

Update: 2018-03-10 21:15 GMT
குன்னூர்,

ஊட்டி காந்தல் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த லாரியை டிரைவர் செல்வகுமார் (வயது 42) ஓட்டி வந்தார். ஊட்டி குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு அருகே லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரியில் திடீரென்ற பிரேக் பிடிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சமயோசிதமாக சாலையோரத்தில் இருந்த வெடிமருந்து தொழிற்சாலைக்கு சொந்தமான சுவரில் மோதி நிறுத்தினர். சுவரில் லாரி மோதியதில் டிரைவர் செல்வகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வெடிமருந்து தொழிற்சாலை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்