15 ஆயிரம் மாணவ– மாணவிகள் பங்கேற்பு தாமிரபரணி சுத்தம் செய்யும் பணி
நெல்லை தாமிரபரணி சுத்தம் செய்யும் பணி நேற்று 2–வது நாளாக நடந்தது. இந்த பணியில் 15 ஆயிரம் கல்லூரி மாணவ–மாணவிகள் ஈடுபட்டனர்.
நெல்லை,

தாமிரபரணி சுத்தம் செய்யும் பணி
நெல்லை தாமிரபரணி கரையோர பகுதியில் 3–ம் கட்டமாக நேற்று முன்தினம் சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. 2–வது நாளாக நேற்று நடந்த தூய்மை பணி நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேராத்து அம்மன் கோவில் ஆற்றங்கரை பகுதி, பாளையங்கோட்டை வெள்ளகோவில், நாரணம்மாள்புரம் நகர பஞ்சாயத்து, அருகன்குளம் உள்ளிட்ட ஆற்றங்கரை பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகள், மாநகராட்சி பணியாளர்கள், அரசு பணியாளர்களின் சங்க பிரதிநிதிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தாமிரபரணி கரையோரம் சுத்தம் செய்யும் எப்படி நடக்கிறது? என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
69 இடங்களில்...
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நெல்லை தாமிரபரணி ஆற்றில் 3–வது கட்டமாக சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. முதற்கட்டமாக நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும், இரண்டாம் கட்டமாக 60 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு 69 இடங்களில் தூய்மை பணிகள் மற்றும் ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
15 ஆயிரம் மாணவ– மாணவிகள்
நேற்று (அதாவது நேற்று முன்தினம்) 100 எந்திரங்களை கொண்டு முட்புதர்கள் அகற்றும் பணி நடந்தது. இன்று (அதாவது நேற்று) 72 கல்லூரிகளை சேர்ந்த 15 ஆயிரம் மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், வருவாய்த்துறை சங்கம், ஊரக வளர்ச்சித்துறை சங்கம், செஞ்சிலுவை சங்கம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் சுமார் 5 ஆயிரம் பேர் என 20 ஆயிரம் பேர் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றங்கரை பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தாமிரபரணியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை தூய்மை பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) இளம்பகவத், அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராமசுப்பிரமணியம், நெல்லை மாநகராட்சி நகர் நல அலுவலர் பொற்செல்வன் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
விக்கிரமசிங்கபுரம்
இதேபோல் விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்து புலவன்பட்டியில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, பணி மேற்பார்வையாளர் முருகன், ஊர் தலைவர் தவமணி, முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் பிராங்கிளின், சிவந்திபுரம் பஞ்சாயத்து செயலாளர் வேலு மற்றும் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி மாணவ–மாணவிகள் 125 பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.