புதிய கர்நாடக கொடிக்கும் மக்கள் மரியாதை கொடுக்க வேண்டும் சித்தராமையா வேண்டுகோள்
தேசிய கொடியை போன்று புதிய கர்நாடக கொடிக்கும் மக்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மைசூரு,
மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பிரியப்பட்டணாவுக்கு வந்தார். அங்கு சித்தராமையா பல்வேறு வளர்ச்சி பணிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
கர்நாடக மாநிலத்திற்கு தனிக் கொடி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை ஏற்று கர்நாடகத்திற்கு புதிய கொடி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொடியை உருவாக்கி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கொடியை தான் பயன்படுத்த வேண்டும். கன்னட ராஜ்யோத்சவா விழாவிலும் இந்த கொடியை தான் பயன்படுத்த வேண்டும். தேசிய கொடியை போன்றே கர்நாடக கொடிக்கும் அனைத்து மரியாதைகளும் உள்ளன. இதனால் மக்கள், தேசிய கொடிக்கு கொடுப்பது போன்று கன்னட கொடிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது.,
கர்நாடகத்தில் மின்தடைக்கு வாய்ப்பு உள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இன்னும் 4 மாதத்திற்கு கர்நாடகத்தில் மின்தடை ஏற்படாது. கோடைகாலத்தை சமாளிக்கும் விதமாக மின்சாரமும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்த ஆண்டு கோடைகாலத்தில் கர்நாடகத்தில் மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.