வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்- ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்
ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதை தொடர்ந்து இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் முதல் நாள் கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு, அடுத்த நாள் கரைக்கு திரும்பிவிடுவார்கள். ஆனால் காரைக்கால் மீனவர்கள் கடல் பகுதியில் தொடர்ந்து 4 முதல் 5 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தினசரி மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை தடுத்து நிறுத்த மீன் வளத்துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை கடலுக்கு சென்று மீன் பிடிக்காமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2-ந் தேதி முதல் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நடைபெற்றது. தற்போது மீன் வளத்துறையினர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளதன் அடிப்படையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.