குக்கர் சின்னம் வழங்க உத்தரவு: டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - டி.டி.வி.தினகரன் பேட்டி
குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட்டு, டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக, டி.டி.வி. தினகரன் கூறினார்.
மதுரை,
மதுரையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. ஆர்.கே.நகரில் நான் சுயேச்சையாக நின்று ஜெயித்த குக்கர் சின்னத்தையும், நாங்கள் கேட்கும் கட்சியின் பெயரையும் (அ.தி.மு.க. அம்மா) வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது இது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் 3 வாரத்திற்குள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே இனிமேல் இரட்டை இலை வழக்கை நான் தொடர்ந்து நடத்தலாம். இதன் மூலம் நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்டு எடுப்போம்.
கட்சியின் பெயர், கொடி குறித்து எல்லோரிடமும் கலந்து பேசி முடிவு எடுப்பேன். ஆகவே எனது அடுத்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு சென்னைக்கு புறப்படுகிறேன்.
சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளேன். அண்ணா, ஜெயலலிதா போன்று எல்லோரிடமும் பேசித் தான் முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.