திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் சிக்கினர்

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமான 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

Update: 2018-03-09 22:45 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமான 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மாவூரை சேர்ந்த சத்யராஜ் (வயது 24) என்ற லாரி டிரைவருக்கு சொந்தமான செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 25), விக்னேஷ்குமார்(20) என்பது தெரியவந்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அவர்களை கைது செய்து செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்தவர் சிவகுமார் (43). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்துச்சென்றனர். அவர்களில் 17 வயது சிறுவனை பொதுமக்களில் சிலர் மடக்கி பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் 18 வயதுக்கு குறைவான மேலும் இருவர் என்பது தெரியவந்தது. போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்