வியாபாரிகள் சங்க தலைவர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு வியாபாரிகள் சங்க தலைவர் குடும்பத்தோடு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம், திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் பி.ஜெயராமன் (வயது 40). இவர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராக செயல்படுகிறார். இவர் நேற்று காலை 11.30 மணி அளவில், தனது மனைவி வளர்மதி மற்றும் மகன், மகளோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.
கமிஷனர் அலுவலக வாசலில் உட்கார்ந்து, பாட்டிலில் தயாராக கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். தனது மகன் தலையிலும் மண்எண்ணெயை ஊற்றினார். இதற்குள் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
தலையில் தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டனர். தீக்குளிக்க முயற்சி செய்தது ஏன்? என்று கமிஷனர் அலுவலக அதிகாரிகள் ஜெயராமனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கூறியதாவது.
கடந்த 5-ந் தேதி அன்று இரவு ரவுடிகள் சிலர் எனது வீட்டு வாசலில் உட்கார்ந்து மது அருந்தி கலாட்டா செய்தார்கள். அவர்களை அங்கிருந்து போகுமாறு நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் அங்கிருந்து போக மறுத்து என்னிடம் சண்டைப்போட்டார்கள். இதுபற்றி பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு நான் தகவல் கொடுத்தேன். போலீசார் வந்தவுடன் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
நள்ளிரவில் அவர்கள் மீண்டும் வந்து எனது வீட்டில் தாக்குதல் நடத்தினார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி எழுத்துப்பூர்வமாக பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் அந்த ரவுடிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நான் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜெயராமன் கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லாவரம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஜெயராமனை சமாதானப்படுத்தி போலீஸ் பாதுகாப்போடு கமிஷனர் அலுவலக அதிகாரிகள் பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.