உத்தமபாளையம் அருகே புதுமாப்பிள்ளையை கொலை செய்த வாலிபர் கைது
உத்தமபாளையம் அருகே புதுமாப்பிள்ளையை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோம்பை ராணிமங்கம்மாள் சாலையில் நேற்று முன்தினம் இரவு காயங்களுடன் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி கோம்பை போலீசார் விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த நபர், கோம்பை திரு.வி.க. தெருவை சேர்ந்த வினோத்குமார் (வயது 32) என்றும், அவர் பெயிண்டராக வேலை பார்த்ததும் தெரியவந்தது. வினோத்குமார் அதே ஊரை சேர்ந்த தமிழரசி (25) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தற்போது தமிழரசி கர்ப்பிணியாக உள்ளார்.
இதையடுத்து வினோத் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் உடல் கிடந்த இடத்துக்கு தேனியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அங்கு இருந்து கோம்பை கிராமசாவடி வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
கொலையாளியை பிடிக்க போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பவுன்ராஜ், திருமுருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வினோத்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்தணன் மகன் ரீகன்ராஜா (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற் கிடையே அவர் தேவாரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்தனர்.
விசாரணையில் வினோத் குமாரை ரீகன்ராஜா கத்தியால் குத்திகொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அது பற்றிய விவரம் வருமாறு:-
என்னுடைய மனைவி முத்துமாரி. எங்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் என் மனைவிக்கும், வினோத்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கண்டித்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். இதனால் மனவேதனை அடைந்தேன். அவர்கள் 2 பேரையும் கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால் மனைவி இறந்த பின்பு குழந்தைகள் அனாதையாகிவிடுமே என்று நினைத்தேன். இதனால் வினோத்குமாரை மட்டும் கொலை செய்ய திட்டமிட்டேன்.
சம்பவத்தன்று அவர் ராணிமங்கம்மாள் சாலையில் மது அருந்துவதற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்றேன். அப்போது அவர் சாலையோரத்தில் அமர்ந்து மது குடிக்க முயன்றார். அந்த சமயத்தில் அவரின் முதுகில் கத்தியால் குத்தினேன். பின்னர் உடலில் பல்வேறு இடங்களில் குத்தி கொலை செய்தேன். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றேன். என்னை போலீசார் தேடுவதாக தெரிந்துகொண்டேன். இதனால் தேவாரத்தில் பதுங்கி இருந்தேன். அங்கு வந்த போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.