ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் நேற்று திடீர் ஆய்வு செய்து, குடிநீர் வசதிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கன்னிவாடி,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் டி.புதுப்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது டி.புதுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். உடனே டி.புதுப்பட்டியில் ஒவ்வொரு தெருவுக்கும் 2 குடிநீர் பொது குழாய்கள் இணைப்பை வழங்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் அதே பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை பட்டியலை பார்வையிட்டார். கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்படுகிறதா? என்று அதிகாரிகளிடம் கேட்டார்.
பின்னர் கலெக்டரிடம் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதில், டி.புதுப்பட்டியில் உள்ள ஊரணிகளை தூர்வார வேண்டும், சுடுகாட்டு பாதையை சீரமைக்க வேண்டும், சுடுகாட்டில் தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் டி.புதுப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். இந்த பள்ளிக்கூடத்தில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து குடிநீர் வசதி செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். இதேபோன்று ஆலந்தூரான் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் கன்னிவாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள், கன்னிவாடி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்வதற்காக டாக்டர்களை நியமிக்க வேண்டும், இந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் கர்ப்பிணிகளை சிகிச்சைக்காக திண்டுக்கல்லுக்கு அனுப்பி வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
எனவே கன்னிவாடி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினர். கலெக்டருடன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஏழுமலையான், குமார், கன்னிவாடி செயல் அதிகாரி விஜயநாத், மருத்துவ அதிகாரி ஜெகவீரபாண்டியன் மற்றும் விவசாயிகளான தண்டபாணி, பாஸ்கரன், சக்திவேல் உள்பட பலர் சென்றனர்.