‘‘அனைத்து சமூகப்பிரச்சினைகளுக்கும் போராட பெண்கள் முன்வர வேண்டும்’’ மகளிர் தின விழாவில் இரோம் ஷர்மிளா பேச்சு
அனைத்து சமூகப்பிரச்சினைகளுக்கும் போராட பெண்கள் முன்வர வேண்டும் என்று மகளிர் தின விழாவில் இரோம் ஷர்மிளா பேசினார்.
தூத்துக்குடி,
அனைத்து சமூகப்பிரச்சினைகளுக்கும் போராட பெண்கள் முன்வர வேண்டும் என்று மகளிர் தின விழாவில் இரோம் ஷர்மிளா பேசினார்.
மகளிர் தினவிழா
தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் மகளிர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி செயலாளர் ஜெசி தலைமை தாங்கினார். சுயநிதிப்பிரிவு இயக்குனர் பெரிக்ரினா, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் டல்சி எலிசபெத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் ரோஸ்லின் வரவேற்று பேசினார்.
வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திய மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் ஷர்மிளா மற்றும் அவருடைய கணவர் தேஸ்மண்ட் ஆண்டனி பெல்லார்மின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.
விழாவில், இரோம் ஷர்மிளா பேசியதாவது:–
போராட முன்வர வேண்டும்
கல்லூரி மாணவிகள் மத்தியில் சர்வதேச மகளிர் தினவிழாவை கொண்டாடுவது பெருமையாக உள்ளது. நான் பெண்ணிய போராளி மட்டும் அல்ல. சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகிறேன். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தற்போது அதிகரித்து உள்ளன. இதற்கு எதிராக பெண்கள் துணிச்சலுடன் போராட வேண்டும். பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக மட்டுமின்றி சமுதாயத்தின் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராட பெண்கள் முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இளம்பெண்களின் வாழ்க்கை சுரண்டப்படுகிறது. தனியார் தொழிற்சாலைகளால் காற்று, நிலம், நீர், கடல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளுக்காக பெண்கள் போராட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக வருகிற 23–ந்தேதி ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதஉரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கு அழைக்கப்பட்டு உள்ளேன். ஆனால் எனது பாஸ்போர்ட் தயாரான நிலையிலும், தர மறுக்கிறார்கள். இதனால் அந்த கூட்டத்தில் பங்கேற்க முடியுமா? என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பாதிரியார்கள் இளவெனில்குமார், சக்கேஸ், வக்கீல் சொர்ணலதா மற்றும் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை மாலினி நன்றி கூறினார். பேராசிரியைகள் இனிதா, ரஷிதா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தொடர்ந்து மாலையில் தூய மரியன்னை கல்லூரியின் 70–வது ஆண்டு விழா நடந்தது.