பனமரத்துப்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பனமரத்துப்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-03-07 23:15 GMT
பனமரத்துப்பட்டி,

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். பிரதமர் வீடு வழங்கும் திட்டம், தனிநபர் இல்ல கழிப்பிடங்கள் கட்டி முடித்தல், திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளை உருவாக்குதல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை கவனத்தில் கொள்ளாமல் நிர்ணயிக்கப்பட்ட பணிகளை விட மாநில, மாவட்ட நிர்வாகம் பணியாளர்களை பணி செய்ய சொல்வதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி அலுவலக பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கென்னடி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்