பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணை தாக்கி பணம் கொள்ளை
அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணை தாக்கி ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில். ஜமாத்தில் கணக்கராக உள்ளார். இவரது மனைவி சர்மிளா(வயது28) நேற்று பகலில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இஸ்மாயிலின் தந்தையை பார்க்க வேண்டும் என்று வீட்டுக்கு வந்துள்ளார். அவரை தர்காவில் சென்று பார்க்குமாறு சர்மிளா கூறியுள்ளார்.
அப்போது குடிக்க தண்ணீர் கேட்ட அந்த நபர் திடீரென்று சர்மிளாவை தாக்கியுள்ளார். அவரது தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதியுள்ளார். இதில் சர்மிளா மயங்கி சாய்ந்தார்.
பின்னர் அந்த நபர் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு வீட்டுக்கு வந்தவர்கள் மயங்கிக்கிடந்த சர்மிளாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகிறார். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.