காட்டாங்கொளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; வாலிபர் பலி

காட்டாங்கொளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2018-03-07 21:30 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் ரெட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜசேகர் (வயது 21). இவர் மறை மலைநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காட்டாங்கொளத்தூர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பின்னால் வந்த அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்