பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை
பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு நாளை மறுநாள்(சனிக்கிழமை) வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நெல்லை,

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
அழைப்பு சலுகை
பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு, நாளைமறுநாள்(சனிக்கிழமை) வரை ரூ.510–க்கு சி–டாப்அப் மற்றும் வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப்அப்களுக்கு ரூ.550–க்கான எக்ஸ்ட்ரா டாக்டைம் வழங்குகிறது. பொதுமக்களின் வசதிக்காக புதிய கவர்ச்சிகரமான தரைவழி இணைப்பு திட்டத்தை எக்ஸ்பீரியன்ஸ் எல்.எல்.–49 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மிக குறைந்த மாத வாடகையான ரூ.49–ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதிலும் வாடிக்கையாளர்களுக்கு இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை இலவச அழைப்பு மற்றும் ஞாயிறு முழுவதும் இலவச அழைப்பு சலுகைகள் உண்டு. இத்திட்ட இணைப்பில் இருந்து செய்யப்படும் பி.எஸ்.என்.எல். அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு ரூ.1 மற்றும் இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு ரூ.1.2 கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டம் 12 மாதங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். அதன்பிறகு இத்திட்டம் சாதாரண தரைவழி இணைப்பு திட்டமாக மாற்றப்படும்.
சிறப்பு திட்டம்
மேலும் அதிகமாக பேசக்கூடிய எண்களை பிரண்ட்ஸ்– பேமிலி என்ற சிறப்பு திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். இந்த எண்கள் இந்தியாவில் உள்ள எந்த தரைவழி மற்றும் மொபைல் எண்ணாகவும் இருக்கலாம். ஒரு எண்ணுக்கு ரூ.21, இரண்டு எண்களுக்கு ரூ.39, மூன்று எண்களுக்கு ரூ.49 என மாதத்துக்கு கூடுதலாக செலுத்த வேண்டும்.
மாத வாடகை ரூ.249–க்கான பிராட்பேண்ட் திட்டத்தில் 5ஜிபி வரையிலும், அதன்பிறகு அளவில்லா இன்டர்நெட் வசதி மற்றும் அனைத்து நெட்வெர்க்கிற்கும் இலவச அழைப்புகள் ஞாயிறு முழுவதும், மற்ற நாட்களில் இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரையும் வழங்கப்படுகிறது.
அளவற்ற அழைப்புகள் மற்றும் டேட்டாவுடன் கூடிய பல்வேறு பிளான்களை பொதுமக்களின் தேவைக்கேற்ப பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. டேட்டா ரேட்கட்டர்கள் ரூ.4–ல் இருந்தும், பேசுவதற்கான வாய்ஸ்ரேட் கட்டர்கள் ரூ.19–ல் இருந்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப உள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.