சேலம் சிறையில் அடைக்கப்பட்ட போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி மீண்டும் கைது
போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி மீண்டும் கைது ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்,
சேலம் சிறையில் அடைக்கப்பட்ட போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி மீண்டும் கைதானார். ஆள்மாறாட்ட வழக்கில் அவர் மீது போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சேலம் புதிய அழகாபுரம் சிவாயநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் விஜயகுமார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு மண்டல வளர்கல்வி வாரியம் என்று நிறுவனத்தை தொடங்கி, அரசு அதிகாரி போல வாகனத்தில் சுழல்விளக்கு பொருத்தி, பொதுமக்களிடம் பேரூராட்சியில் ஒப்பந்த வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றி வந்துள்ளார்.
இது தொடர்பாக அப்போதைய சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் சரஸ்வதி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், அவரது சகோதரர் பரணிகுமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இவர்களில் விஜயகுமார், கோர்ட்டில் ஆஜராகாத காரணத்தால் கடந்த 2004-ம் ஆண்டு 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. கடந்த 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கடந்த மாதம் 26-ந் தேதி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் விஜயகுமார், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்து, பலரிடம் வேலைவாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர் தற்போது மத்திய அரசின் ‘ஜன் ஆயூசுதி யோஜனா‘ என்ற திட்டத்தில் முதன்மை ஆலோசகராக இருந்து வருவதாகவும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டதை போன்று அடையாள அட்டை ஒன்றை போலியாகவும் தயாரித்துள்ளார். மேலும் ‘சேர்மன்‘ என்ற போர்டை சுழல்விளக்கு பொருத்திய காரில் மாட்டிக்கொண்டு முக்கிய பிரமுகர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு, வங்கிக்கடன் வாங்கி தருவதாக ஒரு நபருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கோபிநாத், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் அது தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த 15.2.2018 அன்று சேலம் ஓட்டல் ஒன்றில், விஜயகுமார் என்பவர், பிரதமர் அலுவலக அடையாள அட்டையை போலியாக பயன்படுத்தி கொண்டு மோசடியில் ஈடுபட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மரியமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் விஜயகுமார் மீது ஆள்மாறாட்டம் செய்தல், உயர் அதிகாரி போல நடித்து போலி அடையாள அட்டை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக 3 பிரிவுகளின் கீழ் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். விஜயகுமார் ஏற்கனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், இந்த புதிய வழக்கிலும் அவரை கைது செய்ய அனுமதிவேண்டி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு செய்திருந்தனர். பின்னர் கோர்ட்டு அனுமதியுடன் சிறையில் இருக்கும் விஜயகுமார் புதிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.