மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல், தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா கூறியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2018-03-06 22:45 GMT
குளித்தலை,

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல், தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா கூறியதை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குளித்தலை காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை ஒன்றியக்குழு உறுப்பினர் வடிவேல் தலைமை தாங்கினார். இதில் எச்.ராஜாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அவருடைய உருவப்படத்தை காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்