பாலீஷ் போடுவதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 4 பேர் கைது
கொல்லிமலையில், நகை பாலீஷ் போடுவதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற பீகாரை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள எடப்புளிநாடு ஊராட்சி செங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா (24). இந்த நிலையில் பாக்யராஜ் தோட்டத்திற்கு சென்றிருந்தபோது நிர்மலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அவருடைய வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத 4 இளைஞர்கள் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி நிர்மலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிக்கொடியை அவர்களிடம் கழற்றி கொடுத்தார். அந்த இளைஞர்கள் தாலிக் கொடியை வாங்கி தாங்கள் கொண்டு வந்த ஆசிட்டில் போட்டனர். அது திடீரென உருகியது.
அதை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்மலா கூச்சலிட்டார். அதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த 4 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அங்கு வந்து விசாரனை நடத்தியதில் அவர்கள் 4 பேரும் பீகார் மாநிலம் ரகுநாத்பூர் என்ற ஊரை சேர்ந்த திலீப்குமார் (32), லந்துகுமார் (24) மற்றும் ஐடியா கிராமத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய வாலிபர், செக்பூரா என்ற ஊரை சேர்ந்த 17 வயது வாலிபர் என்பதும், பாலீஷ் போடுவதாக கூறி அவர்கள் நகை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.